Maniyosai

கரப்பான்பூச்சிகள் ஜனநாயகவாதிகளா?

அரசியலமைப்பு சட்டப்படி உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச அதிகாரத்தை ஏன் இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

போராட்டம் என்ற பெயரில் தாங்கள் செய்யும் செயல்கள் எந்த சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது; யாரும் தங்களை கேள்விகேட்கக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை?

அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, இவர்கள் மீது வழக்கு போடுவதில்லை என்ற கோரிக்கையை அரசு ஏற்பதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட காவலர்களோ, அவர்களின் குடும்பத்தினரோ, வேறு யாரோ நீதிமன்றத்தை நாடலாம்தானே. அவர்களுக்கும் நீதி வழங்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமைத்தானே. அதனை கூடாது என இவர்கள் எப்படி சொல்லமுடியும்?

யாரும் கேள்விகேட்காத சுதந்திரம் வேண்டும் என்பது எப்படி உண்மையான ஜனநாயகம் ஆகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *