பிரதான எதிர்க்கட்சியிலிருந்து சிறு குறு லெட்டர்பேட் கட்சிகளின் தலைவர்கள் வரை பட்ஜெட்டை ஆதரிக்கவோ, விமர்சிக்கவோ செய்கின்றனர்.
ஒரு பட்ஜெட் வெளிவந்தவுடன் அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது வெறும் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. சில நேரங்களில் அத்தகைய அறிக்கைகளை பார்க்கும் போதுதான் அவ்வாறு ஒரு கட்சி இருக்கிறது என்பதே நம் நினைவுக்கு வரும்.
சிலரது அறிக்கைகளை பார்க்கும் போது, இவரெல்லாம் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியிருக்க வாய்ப்பில்லையே; இவர் பட்ஜெட் பற்றி இவ்வளவு விலாவாரியாக பேசுகிறாரே என்று எண்ணத்தோன்றும்.
பட்ஜெட் பற்றியெல்லாம் கருத்துகூற பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. ஒரு தலைவர் ஆளும் கூட்டணியில் இருக்கிறாரா அல்லது எதிர்க்கூட்டணியில் இருக்கிறாரா என்பதே அவரது ஆதரவையோ எதிர்ப்பையோ தீர்மானிக்கும்.
ஆளும் கூட்டணியாக இருந்தால் ‘முன்னேற்றத்திற்கான பட்ஜெட்’, எதிர் கூட்டணியாக இருந்தால் ‘ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்’, இதுவே standard template.






Leave a Reply