Maniyosai

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் வெகுவிமர்சையாக நடத்தப்படுகிறது.

ஒரு சமயம் உயிரினங்கள் யாவும் உணவுக்கு அதிக முக்கியத்துவம் தர தேவையில்லை என சிவபெருமான் கூறினார். அதோடு கடும் பஞ்சத்தையும் ஏற்படுத்தினார். இதனால் உயிரினங்கள் உணவின்றி சிக்கித் தவித்தன.

இதனைக் கண்டு வருத்தமுற்ற பார்வதி தேவி, அன்னபூரணி என்ற பெயரில் காசியில் தங்க கரண்டியால் உணவு பரிமாறி பஞ்சத்தைப் போக்கினார்.

அப்போது சிவபெருமானே கையில் திருவோட்டுடன் அன்னபூரணயிடம் யாசகம் பெற்றார் என்கிறது புராணம்.

இதனை நினைவுகூரும் வகையில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

உணவு என்பது இறைவன் கொடுக்கும் அருட்பிரசாதம். அதனை வீணடிப்பது பாவச்செயல் என்பதையும் நாம் உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *